ரூம் போட்டு யோசிக்க... சென்னை டூ சிங்கப்பூர் இசை பயணம்...

Sekar Tamil
சென்னை:
ரூம் போட்டு யோசிச்சு படத்தை எப்படி எல்லாம் ப்ரொமோட் செய்யறாங்க தெரியுங்களா? அதில் இதுவும் ஒரு வகை. எப்படி தெரியுங்களா?


சென்னை டூ சிங்கப்பூர் படத்தின் இசைப்பயணத்தை நடிகர் சூர்யா நேற்று சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ் சினிமா வரலாற்றில் புதியதொரு சாதனையை படைக்க இப்படி ஒரு ஏற்பாடு நடந்துள்ளது.


எப்படின்னா... 'சென்னை டூ சிங்கப்பூர்' படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்காக ஆறு பாடல்களை சென்னை உட்பட ஆறு நாடுகளில் சாலை வழியே பயணித்து வெளியிட முடிவு செய்திருந்தார். இப்போ அதை செய்துட்டாங்க... இந்த பயணத்தை நடிகர் சூர்யா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.


நேற்று துவங்கியுள்ள இந்த பயணம் சுமார் இருபது நாட்கள் தொடர்ந்து பூட்டான், மியான்மார், தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பாடல்களை வெளியிட உள்ளனர் படக்குழுவினர்.  இதில் முதல் பாடல் சென்னையில் வெளியிட்டுள்ளனர். செய்யுங்க... செய்யுங்க...


Find Out More:

Related Articles: