ஆகஸ்டில் ..... ரஜினி வருகிறார்....

Sekar Tamil
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் 'கபாலி' திரைப்படம் வெளிவந்து,தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகின்றது.மேலும் இதுவரை ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களை காட்டிலும், இந்த படம் தான் அதிக வசூலை பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதனையடுத்து, கடந்த சில மாதங்களாக ரஜினி அமெரிக்காவில் ஒய்வு மேற்கொண்டு, அண்மையில் இந்தியாவிற்கு திரும்பினார் என்பதை நாம் அறிந்தோம். 


இந்நிலையில் அவர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள மற்றொரு திரைப்படமான '2.0' திரைப்பட படப்பிடிப்பில், ஆகஸ்ட் இறுதியில் கலந்து கொள்ளவிருக்கிறாராம். 


தற்போது ரஜினி இல்லாத காட்சிகளை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன், சுதன்ஷு பாண்டே உள்பட பலர் நடிக்கின்றனர்.இதன் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


Find Out More:

Related Articles: