சீக்கிரமே வரேன்....வரேன்.... வா டீலுக்கு....

Sekar Tamil
அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் விக்டர் ரோலில் நடித்து, அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர் அருண் விஜய். இந்த படத்திற்கு பிறகு இவரது மார்க்கட் அந்தஸ்து பல மடங்குகள் உயர்ந்துள்ளன. 


இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'வா டீல்' திரைப்படத்திற்கு தற்போது பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. அதாவது என்னவென்றால்..... இந்த மாதம் வெளிவர இருக்கும் 'வா டீல்' திரைப்படத்தை ,படக்குழுவினர் சென்சார் அதிகாரிகளுக்கு போட்டுக் காண்பித்துள்ளார். 


அவர்கள் இப்படத்திற்கு சுத்தமான 'யு' தர சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் இந்த படத்திற்கு 30 சதவீத வரி விலக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


அருண் விஜய், கார்த்திகா நாயர், வம்சி கிருஷ்ணா, ஷக்தி, கல்யாண் மாஸ்டர், ஜெயபிரகாஷ், ரேணுகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிவஞானம் இயக்கியுள்ள இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். 


மேலும் இதன் ரிலீஸ் தேதி விரைவில் அதிகார பூர்வமாக வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: