ஓஎம்ஆர் சாலையில்....விஜய் - கீர்த்தி சுரேஷ்

Sekar Tamil
'தெறி' திரைப்படத்திற்கு பிறகு விஜய் தனது 60-வதாவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 'அழகிய தமிழ் மகன்' திரைப்பட இயக்குனர் பரதன் இந்த படத்தை இயக்குகிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 


இந்நிலையில் தற்போது வெளிவந்த உண்மை தகவலில், இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் விஜய் -கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டுள்ளதாகவும், இந்த படப்பிடிப்பில் சென்னை ஓ.எம்.ஆரில் இருக்கும் ராஜிவ் காந்தி சாலையில் நடைபெறுவதாக தகவல்கள் வந்துள்ளன.


மேலும் இந்த படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 21-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதில் விஜய் - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.



Find Out More:

Related Articles: