சென்னை:
நட்சத்திர தம்பதிகள் என்றால் அவர்கள் வாழ்வில் நடக்கும் சிறிய விஷயம் கூட பத்திரிகைகள், மீடியாவில் பெரியளவில் வந்து விடுகிறது. தற்போது இந்த லிஸ்டில் இணைந்துள்ளார் நடிகை திவ்யா உண்ணி.
யார் என்று ஞாபகம் வருகிறதா... தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். அதைவிட பார்த்திபன் நடித்து ஹிட் அடித்த சபாஷ் படத்தில் நடித்தாரே அந்த நடிகையேதான். இவர்தான் தன் கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளாராம். என்ன விஷயம்.
முதலில் இவரது கணவருக்கு கள்ளத்தொடர்பு என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அது உண்மையல்ல என்று தெரியவந்துள்ளது. என்ன விஷயம் என்றால் திவ்யா நடத்தி வரும் நடனப்பள்ளிதான் இருவருக்குள்ளும் ஈகோவை தூண்டி விட இப்போது டைவர்ஸ் செய்யும் அளவிற்கு தள்ளிவிட்டுள்ளது.