எப்போ.. திருமணம்... சுற்றி வளைத்து பதில் சொல்லும் அனுஷ்கா

Sekar Tamil
மும்பை:
எப்போ... திருமணம் என்றால் சுற்றி வளைத்து பதில் சொல்கிறாரே... அப்போ அவர் ஆசை நிராசையாகிவிடுமா என்று ரசிகர்கள் வேதனையடைந்துள்ளனர். 


காதலர் விராட் கோஹ்லியுடன் உங்களுக்கு திருமணம் எப்போது என்ற கேள்விக்கு பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா கூறியுள்ள பதிலை பாருங்க...


என் சகோதரருக்கு திருமணம் எப்பொழுது என்றும் யாரும் கேட்க மாட்டார்கள். திருமணமானால் அடுத்து பேரக்குழந்தைகளை எதிர்பார்ப்பது மிகவும் சுயநலமாகும். திருமணம் நடக்கும்போது நடக்கும் என்று நினைக்கிறேன்.


நான் மனரீதியாக தயாரான பிறகே திருமணம் செய்து கொள்வேன். திருமணம் என்பது ஜோக் அல்ல. (ஏங்க ஏன் இப்படி கொல்றீங்க...)
இன்னொருவருடன் சேர்ந்து வாழ நம்மை நாமே தயார் செய்துகொள்ள வேண்டும். (அதுதானேங்க திருமணம்) அப்படி நான் தயாரான பிறகு திருமணம் செய்வேன். (அதுதான் எப்போதுன்னு கேட்கிறோம்.) இப்படி பதில் சொல்லி மண்டையை பிய்த்துக்கொள்ள விட்டுள்ளார். 


விராட் கோஹ்லி சீக்கிரமாக அனுஷ்காவை திருமணம் செய்ய விரும்புகிறார். ஆனால் அனுஷ்கா சொல்வதை பார்த்தால் தற்போதைக்கு அவரது ஆசை நிறைவேறாது போல் உள்ளதே!


Find Out More:

Related Articles: