மன்னிப்பு கேட்க வேண்டும்... இல்லாட்டா... எச்சரிக்கை...

frame மன்னிப்பு கேட்க வேண்டும்... இல்லாட்டா... எச்சரிக்கை...

Sekar Tamil
சென்னை:
மன்னிப்பு கேட்காவிட்டால் அப்புறம் அவ்வளவுதான் என்று சுட்டு விரலை காட்டி எச்சரித்துள்ளனர் தயாரிப்பாளர் சங்கத்தினர்.


என்ன விவகாரம் என்றால்... நடிகர் விஷால் வார இதழுக்கு அளித்த பேட்டிக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றுதான் தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.


சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டி குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, விஷாலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


தயாரிப்பாளர் சங்கத்தை அவமரியாதை செய்யும் வகையில் விஷால் பேட்டி அளித்துள்ளார். இதை வன்மையாகக் கண்டிப்பதுடன், ஒரு வாரத்திற்குள் விஷால் இதற்கு வருத்தம் தெரிவிக்கவேண்டும். இல்லாவிடில்  கத்திச்சண்டை திரைப்படத்தை தவிர்த்து அவர் நடிக்கும் எந்த படத்திறகும் தயாரிப்பாளர் சங்கமும் தயாரிப்பாளர்களும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
இந்த தீர்மானம் தான் கோலிவுட்டை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது.


Find Out More:

Related Articles:

Unable to Load More