கணவரை பிரியும் அடுத்த நட்சத்திரம்... உண்மையா?

Sekar Tamil
சென்னை:
பிரபல டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் தன் கணவரை பிரிய போவதாக வந்த தகவல்கள்தான் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


அந்த வில்லங்க மேட்டர் குறித்து பார்ப்போம். விஜய் டிவியின் செல்லப்பிள்ளையான நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. 5 ஆண்டுகள் காதலித்து, காத்திருந்து பநீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 


இந்த பநீகாந்த், கௌதம் மேனன் உதவியாளராக இருந்தவர் என்பதும், சினிமா இயக்க முயற்சிகள் மேற்கொண்டு அதில் தோல்விஅடைந்தார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் டிடியின் கிரேஷ் குறையவே இல்லை.


அவர் எப்போதும் பிசியாக இருந்தார். மனைவி பிஸியாக... கணவர் டல் அடிக்க எட்டிப்பார்த்த ஈகோவால் இருவருக்கும் பிரச்னை என்று சின்னத்திரை வட்டாரங்கள் வதந்தி பரப்புகின்றன. இதனால் முட்டல் மோதல் அதிகரித்து தன் கணவரை பிரிய உள்ளாராம் டி.டி. என்ற தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து இருவருமே வாய் திறந்தால்தான் உண்மை வெளியில் வரும்.


சமீபகாலமாக இருவரும் சேர்ந்து எந்த விழாவிலும் தலையை காட்டாதததும் இதனால்தான் என்று அணுகுண்டை திரி கிள்ளி பற்ற வைக்கின்றனர். என்னம்மா... எது உண்மையம்மா...



Find Out More:

Related Articles: