படம் குவித்தது... பொம்மைகளும் கோடிகளை கொடுத்திருக்கு...

Sekar Tamil
சென்னை:
படம் ஒரு பக்கம் சாதனைகள் செய்ய பொம்மைகளும் கோடிக்கணக்கில் வசூலை குவித்து கொடுத்துள்ளது. என்ன படம்... என்ன பொம்மை என்கிறீர்களா?


இதோ இதுதான் விஷயம்... கபாலி உலகம் முழுவதும் ரூ.500 கோடிகளுக்கு மேல் வசூல் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனால் "கபாலி பொம்மை" என்று சிங்கப்பூரில் ரஜினி வடிவிலான 40 ஆயிரம் பொம்மைகள் விற்கப்பட்டுள்ளது.


இந்த பொம்மைகள் 85 சதவீதம் விற்று விட்டதாம். ஒரு பொம்மையின் விலை ரூ.1986. அது எவ்வளவாக இருந்தால் என்ன கபாலி பொம்மை ஆச்சே... விடுவாங்க... ரசிகர்கள் மொய்த்த மொய்ப்பில் வசூல் கல்லாவை நிரப்பி இருக்கு.


இந்த பொம்மையை வெளியிட்ட நிறுவனத்திற்கு செம ஹேப்பியாம்.. இருக்காதா பின்னே... அள்ளிய பணத்தை எண்ணவே நேரம் போததே... எவ்வளவு தெரியுங்களா கல்லாத கட்டிய தொகை ரூ. 6 கோடிக்கும் மேலாம்...


இப்படியெல்லாம் கூட வசூல் செய்ய முடியும் என்பதற்கு ரஜினி மட்டுமே ஒரே உதாரணம். அவர் மட்டும்தான் சரியான உதாரணம்...



Find Out More:

Related Articles: