ராதிகாவின் இடம் பறிப்பா? என்ட்ரி கொடுக்கிறார் குஷ்பு

frame ராதிகாவின் இடம் பறிப்பா? என்ட்ரி கொடுக்கிறார் குஷ்பு

Sekar Tamil
சென்னை:
அப்போ... ராதிகாவுக்கு கல்தாவா என்று அதிர்ந்து போய் உள்ளது சின்னத்திரை வட்டாரம்.


பெரிய திரையில் நாயகியாகி வெளுத்து கட்டியவர் ராதிகா. பின்னர் சின்னத்திரையிலும் இவர்தான் அறிவிக்கப்படாத மகாராணியாக வலம் வந்தார். இப்போது இவரது அரியாசனத்திற்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


என்ன விஷயம் என்று பார்ப்போமா? நடிகை குஷ்பு கோடீஸ்வரி என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தார். பின்னர் ஜாக்பாட், பூவா தலையா, சிம்ப்ளி குஷ்பூ என்று பல நிகழ்ச்சிகளை சில சேனல்களுக்கு தொகுத்து வழங்கினார். இருந்தாலும் சொந்தமாக இவர் எந்த நிகழ்ச்சியையும் தயாரித்து வழங்கவில்லை.


இந்நிலையில் இவர் ஒரு சரித்திர தொடரை சன் டிவிக்காக தயாரிக்கப் போகிறாராம். இங்குதான் ஆரம்பம் ஆகியுள்ளது அரசியல். இந்த தொலைக்காட்சியில் நீண்ட காலமாக முக்கிய பங்கு வகிக்கும் ராதிகாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள நேரத்தில்தான் குஷ்புவின் தொடரை ஒளிபரப்பு செய்து கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாம். அப்போ... ராதிகாவுக்கு கல்தாவா?


Find Out More:

Related Articles:

Unable to Load More