பிர்லியண்ட் பிலிம்... பாராட்டியது ரஜினி... ஜோக்கர் "மகிழ்ச்சி"

Sekar Tamil
சென்னை:
வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் என்பது போல நம்ம சூப்பர் ஸ்டாரிடம் இருந்து பிர்லியண்ட் பிலிம் என்ற பாராட்டு கிடைத்தால் எப்படி இருக்கும். கிடைச்சிருக்கே...


எந்த படத்திற்கு தெரியுங்களா? இந்த பெருமை. ராஜீ முருகனின் ஜோக்கர் படத்திற்குதான். இந்த படத்தை பாராட்டி நடிகர் ரஜினி தனது டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.


இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராஜீமுருகன் இயக்கிய படம் 'ஜோக்கர்'. சட்டசபைத் தேர்தல் சமயத்தில் ரிலீசாக வேண்டியது. ஆனால் காலம் கடந்து தற்போது வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த படம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் என்று நிரூபித்து விட்டது. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.


பல முன்னணி திரைப்பிரபலங்களும் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இப்போது நம்ம சூப்பர் ஸ்டாரும் பாராட்டிட்டார். அப்புறம் என்ன? ஜோக்கர் சூப்பர் படம்தானே... 


Find Out More:

Related Articles: