'தெறி' படத்திற்கு பிறகு 'அழகிய தமிழ்மகன்' திரைப்பட இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் தனது 60-வதாவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் ஜெகபதி பாபு, அபர்ணா வினோத், டானியல் பாலாஜி, ஹரிஷ் உத்தமன், தம்பி ராமைய்யா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
ஹைதராபாத், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு தற்போது இறுதியாக சென்னையில் நடைபெறுகிறது. இந்த படப்பிடிப்பு வரும் ஞாயிறு கிழமையோடு நிறைவடைவதாகவும், அதன் பிறகு பின்தயாரிப்பு பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகின்றன.
மேலும் இதுகுறித்து, நடிகர் ராஜேந்திரன் தனது டிவிட்டர் வலைதள பக்கத்தில், 'விஜய் 60 ஷூட்டிங் வரும் ஞாயிறு கிழமையோடு முடிவுக்கு வருகிறது. மனுஷன் பின்னி பெடல் எடுத்துருக்காரு. வரும் 2017 பொங்கல், நமக்கு செம்ம கலெக்ஷன் மா'... என்று பதிவு செய்து, இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.