ஏ.ஜி.எஸ் தயாரித்த முதல் படத்தின்.... இரண்டாம் பாகம்

Sekar Tamil
பிரபல தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக திகழும் 'ஏஜிஎஸ்' நிறுவனம் முதன்முறையாக ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா, மனோஜ், அப்பாஸ் உள்ளிட்டோர் நடித்த 'திருட்டு பயலே' திரைப்படத்தை தயாரித்தது. இந்த படம் சூப்பர் ஹிட்டாகி, நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. 


முதற்பாகத்தை இயக்கிய சுசி கணேஷன்னே இதன் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க போகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. 


இதில் வில்லனாக பாபி சிம்ஹா தான் நடிக்க போகிறார். அவருடைய திருட்டு பயலாக பிரசன்னா நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற இருக்கிறது. மேலும் இதில் நடிக்கவுள்ள நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: