சென்னை:
ஒற்றுமையாக வாழ்பவர்கள் வாழ்வில் வெடி வைக்கிறாங்க... இது வதந்திதான் என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
என்ன இந்த வதந்தி... தெரியுங்களா... கடந்த 2 நாட்களாக சினிமா மற்றும் சின்னத்திரை உலகை ஒரு செய்தி கலக்கி வருகிறது. விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி.
இவர் கடந்த 2014ம் ஆண்டு பநீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் பற்றிய வதந்திதான் கடந்த 2 நாட்களாக உலா வந்து கொண்டிருந்தது. கடந்த சில மாதங்களாக இவர்கள் இருவருக்குள்ளும் விரிசல். அதனால் கணவரை விட்டு பிரிய போகிறார் என்ற வதந்திதான் அது.
ஆனால் இதை முற்றிலுமாக மறுத்துள்ளார் டிடியின் செய்தி தொடர்பாளர். இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. டிடியும் அவரது கணவரும் ஒற்றுமையாக ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள். யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என்று தெரிவித்துள்ளார். எப்படியோ... நன்றாக இருந்தால் சரி என்கின்றனர் ரசிகர்கள்....