இன்னைக்கு பர்ஸ்டே.. பர்ஸ்ட் ஷோ.... கபாலி ஸ்பெஷல் ஷோ...

frame இன்னைக்கு பர்ஸ்டே.. பர்ஸ்ட் ஷோ.... கபாலி ஸ்பெஷல் ஷோ...

Sekar Tamil
சென்னை:
பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்க்க வேண்டும் என்பதுதான் ரஜினி ரசிகர்களின் பெரும் ஆவல். இது அவரது அனைத்து படங்களுக்கும் பொருந்தும். 


கபாலி ரிலீஸ் தேதி அன்று பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்க்க வேண்டும் என்று மாவட்டம் தாண்டி மாவட்டம் வந்த ரசிகர்கள் கூட இருக்கின்றனர். ஆனால் ஆயிரக்கணக்கானவர்கள் வந்தததில் பலருக்கு ரஜினி படத்தை முதல்ஷோ பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. 


இந்த காட்சியின் போது விசிலடித்து கொண்டாடி... கலர் பேப்பர்களை தூவி ரசிகர்கள் உற்சாகமாக இருப்பார்கள். தற்போது முதல் நாள் ரிலீஸ் அன்று எப்படி இருந்ததோ, அதேபோல் இன்று கபாலி ஸ்பெஷல் ஷோ பிரபல திரையரங்கான ராம் சினிமாஸில் திரையிடப்பட இருக்கிறதாம்.


முதல் நாளில் நடக்கும் அதே ஆட்டம், பாட்டம், வெடிகள் என கொண்டாட்டமாக இன்று காலை 10 மணிக்கு கபாலி படம் திரையிடப்பட இருக்கிறது. விசிலடிச்சான் ரசிகர்களே... நீங்க ரெடியா... ரெடியா...


Find Out More:

Related Articles:

Unable to Load More