அதிக பணம் கட்டி...விவாகரத்து பெற்ற 7 பாலிவுட் நட்சத்திரங்கள்...

frame அதிக பணம் கட்டி...விவாகரத்து பெற்ற 7 பாலிவுட் நட்சத்திரங்கள்...

Sekar Tamil
பாலிவுட் நட்சத்திரங்கள் சிலர் தங்கள் துணையை விவாகரத்து செய்த பின்பு, அவர்களுக்கு அதிக பணம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் யார் யார் என்பதை இப்போது நீங்களே பாருங்கள். 


1. ஹ்ரித்திக் ரோஷன் 


இவர் தனது முன்னாள் மனைவி சுசானே கானை விவாகரத்து செய்து, அவருக்கு மொத்தமாக 380 கோடிகளை ஜீவனாம்சமாக கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.


2. கரிஷ்மா கபூர் 


இவர் நடிகை கரீனா கபூரின் சகோதரி. இவர் சஞ்சய் கபூரை திருமணம் செய்து அவரது 2 குழந்தைகளுக்கு தாயானார். அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், இவர் சஞ்சயை பிரிந்தார். 


இவரை சஞ்சய் கபூர் விவாகரத்து செய்த போது, 14 கோடிகள் கொடுத்துள்ளார். மேலும் அவரது குழந்தைகளுக்கு மாதம் 10 லட்சம் செலவுக்கு கொடுத்து வருகிறார்.


3. பிரபுதேவா 


நடன இயக்குனரும், நடிகருமான பிரபு தேவா தனது முன்னாள் மனைவி ரம்லத்திற்கு சுமார் 25 கோடிகள் கொடுத்து, விவாகரத்து பெற்றார்.


4. சஞ்சய் தத் 


ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், தனது முன்னாள் மனைவி ரியாபிள்ளைக்கு 8 கோடி ஜீவனாம்சம் வழங்கி விவாகரத்து பெற்றார். 


5. சைப் அலி கான் 


கரீனா கபூரின் கணவர் சைப் அலி கான் தனது முன்னாள் மனைவி அம்ரிதா சிங்கிற்கு  7 கோடி கொடுத்து விவாகரத்து பெற்றார்.


6. பர்கான் அக்தர் 


இவர் தனது முன்னாள் மனைவி அதுனா அக்தருக்கு 10000 சதுர அடியிலுள்ள வீட்டை ஜீவனாம்சமாக வழங்கி, விவாகரத்து பெற்றார்.


7. ஆதித்யா சோப்ரா 


ஆதித்யா சோப்ரா தனது மனைவி பாயல் கன்னாவிற்கு பெருந்தொகை அளித்து, விவகாரத்து பெற்றதாக கூறப்படுகிறது. 




Find Out More:

Related Articles: