ஆக்ஷன் நாயகியான விமலா ராமன்

Sekar Tamil
'பொய்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான விமலா ராமன், இதையடுத்து 'ராமன் தேடிய சீதை' திரைப்படத்தில் மட்டும் நடித்தார். அதன் பிறகு அவருக்கு எந்த தமிழ்ப்பட வாய்ப்புகளும் கிடைக்காததால், மலையாளம், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். 


இந்நிலையில் 8 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அவர் ஆக்ஷன் கதாநாயகியாக நடிக்கிறாராம். 


இதன் படப்பிடிப்பு மற்றும் இதில் நடிக்கும் நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை. எனவே விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: