சினிமாவை விட்டு வெளியேறும் டாப்ஸி

Sekar Tamil
'ஆடுகளம்' திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான டாப்ஸி. இதையடுத்து அஜித்தின் 'ஆரம்பம்', 'வை ராஜா வை' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வந்தார். 


இவருக்கு தமிழ்சினிமாவில் பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்காததால், தெலுங்குவிற்கு தாவினார். தற்போது தெலுங்கு சினிமாவில் புதுப்புது நடிகைகள் வருவதால் இவரை அங்கும் ஒதுக்கினர். 


இதனால் டாப்ஸி பாலிவுட்டில் நடிக்க முடிவு எடுத்தார். பிரபல நடிகர் அமிதாப் பச்சன் உடன் இணைந்து 'பிங்க்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வெளிவந்து ஹிட்டானால், அவர் பாலிவுட் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பாராம், இல்லையெனில் சினிமாவை விட்டு வெளியேறுவார் என கிசுகிசுக்கப்படுகின்றன.


Find Out More:

Related Articles: