போதை ஏறிப்போனதால்... போலீஸ் வாகனம் சொட்டையானது டமால்ன்னு மோதிய பிரபலத்துக்கு... உடனே கிடைத்தது "ஜாமீன்"

Sekar Tamil
சென்னை:
காசு... பணம்... துட்டு... மணி... மணி... பிரபலம்... ஆகியவை இருந்தால் சல்யூட் அடித்து வழியை காட்டுவார்கள் போல் உள்ளது. இதுவே சாதாரண பிரஜையாக இருந்து விட்டால்... லத்தி கம்பு உடைந்து அவரது விலா எலும்புகள் நொறுங்கி போய் இருக்கும். இன்றைய டாப் ஆப் ஸ்பீக் இந்த விஷயம்தான். தமிழ்நாடு மட்டுமின்றி நெட்டிசன்களும் "கவனி... கவனி என்று கவனித்து" வரும் விஷயமும் இதுதான்... 


என்னவென்று பார்ப்போம்... விர்... விர்...ர்ம்... ர்ம்... டம்... டமால்... நள்ளிரவில் இந்த சத்தம் கேட்டால் எப்படி இருக்கும். அதுவும் போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே... அட அதை விட பெரிய மேட்டரு... போலீஸ் வாகனத்துக்கே டொக்கு விழ வைத்ததுதான். இதுதான் தமிழகத்தின் ஹாட்... அண்ட் பிராப்ளம் மேட்டர்.


இப்படி ஒரு விபத்தை ஏற்படுத்திய பிரபலம் யார் தெரியுங்களா? நட்சத்திர குடும்பம் என்று தமிழக மக்களால் செல்லமாக வர்ணிக்கப்படும் நடிகர் விஜயகுமாரின் வாரிசு நடிகர் அருண் விஜய்தான் இந்த சர்ச்சைக்குரிய பிரபலமாகி இருக்கிறார். அப்பா, அம்மா நடிகர்கள்... அந்த வழித்தடத்தில் தானும் நடந்தால் உயரே சென்று விடலாம் என்று சினிமாவில் கால், கை, தலை காட்டினார். 


என்னத்தான் வாரிசு நடிகராக இருந்தாலும் "சரக்கு" அட இது வேற சரக்கு... அதாங்க... திறமை... திறமை இருந்தால்தான்தானே முன்னுக்கு வர முடியும். முக்கிப்பார்த்தார்... முனகி பார்த்தார்... என்னன்னவோ செய்தும் பார்த்தார்... சராசரி ஹிட் கூட கொடுக்க முடியாத நிலை...சொந்த தயாரிப்பில் வந்த படம் மட்டும் சற்றே கை கொடுக்க... மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்தார். அப்போதுதான் வந்து சேர்ந்தது லட்டு போன்ற ஒரு வாய்ப்பு... கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க அஜித் ஹீரோவாக நடிக்க... அருண் விஜய்க்கு வில்லன் வாய்ப்பு வந்த படமாக அமைந்தது என்னை அறிந்தால் படம். படத்தின் வெற்றி சற்றே அருண் விஜயை கோலிவுட் திரும்பி பார்க்கும் நிலையை உருவாக்கியது. 


இப்போது ஈரம் இயக்குனருடன் ஒரு படம்... ஏற்கனவே தயாரிப்பில் இருந்த ஒரு படம் என்று சற்று பிசியாகி உள்ளார். இவர் மட்டுமின்றி... இவரது குடும்பமே திரையுலகில் பிரபலம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதுதான் தற்போது இவருக்கு செம ஆப்பு அடிக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது. நடிகை ராதிகாவின் மகள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு தன் மனைவியுடன் சென்றுள்ளார் அருண் விஜய்...



சினிமா பிரபலங்கள் நடத்தும் நிகழ்ச்சி என்றால் "தீர்த்த வாரி" இல்லாமல் இருக்குமா... வாரி... வாரி... தீர்த்தமாடியதில் கண்ணும்... தெரியலை... மண்ணும் தெரியலை... சிவக்குமார் நடித்த சிந்துபைரவி படத்தில் வரும் தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்னு பாடாத குறைதான் அருண் விஜய்க்கு.


டாஸ்மாக்கிற்கு நேரம் குறைப்பு... கடைகள் குறைப்பு என்று சாதாரண மக்களை குடியிலிருந்து மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இதுபோன்ற பிரபலங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் மது ஆறாக ஓடுகிறது... அதுவும் விடிய... விடிய குடியும், கூத்தும்தான்.. இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏன் தடை விழுவதில்லை... என்பதுதான் தெரியாத நிலை.


சரி நாம் விஷயத்திற்கு வருவோம்... மப்பில் மண்டைக்குள் விர்... விர்... என்று மணியடிக்க காரை எடுத்து பறக்கவிட்டுள்ளார் அருண்விஜய்... பறந்த கார் டம்... டமார் என்று மோதி நின்றுள்ளது. மோதியது போலீஸ் வாகனத்தின் மீது.... பின்பக்கம் சொட்டையாக... அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமில்லை... மோதிய இடம் போலீஸ் ஸ்டேஷன் வாசலில்தான். டென்ஷனான போலீசார் திமுதிமுவென்று காரை சூழ்ந்து கொள்ள... நிலை கொள்ளாத போதையுடன் அங்கு அருண்விஜய்... அடடா.... இப்படி ஒரு பிரபலம்... இந்த நிலையிலா...



வழக்கம் போல் போலீசார் டிரங்க் அண்ட் டிரைவ்... ஆக்சிடெண்ட் என்று வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த தகவல் உடனே பறந்தது விஜயகுமாருக்கு... நாட்டாமை சொம்பை எடுக்காமல் பறந்து வந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அருண் விஜய் வெளியில் வந்துவிட்டார் ஜாமீனில்... இடைப்பட்ட நிமிடத்தில் என்ன நடந்திருக்கும்... அது அந்த "காந்திக்கே" வெளிச்சம். இதேபோல்தான் போதையில் ஆடிக்கார் ஓட்டி வந்து ஒருவரின் உயிரை பறித்த பெண் இன்னும் சிறையில் உள்ளார். 



ஆனால் அருண் விஜய்யோ... ஆக்சிடெண்ட் செய்து விட்டு வீட்டு சென்றுவிட்டார். போலீசார் வாகனத்தை அவர்கள் சரி செய்து கொடுத்து விடுவார்கள். இதுவே ஒரு சாதாரண "குடி" மகன் செய்திருந்தால்....? இதுதான் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. டாஸ்மாக்கை விட்டு வெளியில் வருபவர் என்ன குடிக்காமலா வருவார்... அவரை பிடித்து எங்கே ஊது... எங்கே ஊது என்று கேட்கும் போலீசாரே... போலீசாரே... இப்படி புல் மப்பில் வந்து உங்க வாகனத்திலேயே மோதியவரை நீங்களே வழியனுப்பி டாட்டா காண்பிக்கிறீர்களே இதுசரியா என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.


இப்படித்தானே சல்மான்கான் விபத்திலும் நடந்தது. இதுவே சாதாரண பிரஜை செய்திருந்தால் இந்நேரம் அவர் புழல் சிறையில் மடங்கி கிடப்பார் என்பதை இந்த ஊரே அறியுமே. அப்போது சட்டம் என்றால் பிரபலங்களுக்கு வளைந்தும், நெளிந்தும் போய் விடக்கூடியதா? சமூக வலைதளங்களில் இப்படி கேள்வி கேட்டு போலீசாரை நெம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.


அவர்கள் கேட்கும் கேள்வியும் சரிதானே. ரொம்ப பிரபலமாக இருப்பதால் எந்த தப்பு செய்தாலும் கவனிக்க வேண்டியவிதத்தில் கவனித்தால் வெளியில் வந்துவிடலாம் என்ற தவறான பில்டிங்கிற்கு காவல்துறையினரே அஸ்திவாரம் தோண்டித்தரலாமா? சொல்லுங்க... ஆபீசர்... இதுசரியா... முறையா... சைக்கிளில் லைட் இல்லாமல் வந்தவர்கள்... அப்புறம் பைக்கில் ஹெல்மெட் இல்லாதவர்கள் உங்களிடம் சிக்கி படும் பாடு உங்களுக்கே தெரியும். அப்படி இருக்க... இப்படி ஒரு விபத்தை ஏற்படுத்தியவர் எப்படி சில மணி நேரங்களில் வீட்டுக்கு சென்றார்? சொல்லுங்க ஆபீசர்ஸ்... இப்படி கண்டனங்களால் வாங்கிக் கட்டிக் கொள்கின்றனர் காவல்துறையினர் நெட்டிசன்களிடம்.


Find Out More:

Related Articles: