சென்னை:
அவரா... அரசியலிலா... இருக்காதுங்க... இருக்கலாமோ... ரசிகர்கள் வெகுவாக குழப்பம் அடைந்துள்ளனர். எதனால் தெரியுங்களா?
தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா என்றால் யாரும் மறுக்கமாட்டார்கள். இப்போது இவர் தயாரிப்பாளராகவும் மாற உள்ளதாக ஒரு செய்தி கோலிவுட்டை ரவுண்டு கட்டி அடித்து வருகிறது.
மேலும் இவர் அரசியலிலும் சமீபகாலமாக சத்தமில்லாமல் ஈடுபாடு காட்டி வருகிறார் என்கின்றனர் விபரமறிந்தவர்கள். இதை எப்படி நிரூபிக்கின்றனர் தெரியுங்களா? சமீபத்தில் ஆளுங்கட்சி சார்பில் நடத்திய ஒரு ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் விழாவில் நயன்தாரா கலந்து கொண்டதை வைத்துதான் அப்படி சொல்கின்றனர்.
தான் நடித்த எந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கும் வராதவர் இதற்கு மட்டும் எப்படி வந்தார். எனவே விரைவில் அதே கட்சியில் இவர் இணைந்து விடுவார் என்கின்றனர். என்னவோ போங்க...