சென்னை:
வெகு காலத்திற்கு பிறகு மீண்டும் அந்த கேரக்டரில் நடிக்கிறார் விஜய் என்கின்றனர். அப்படியா? என்று கேட்கின்றனர் ரசிகர்கள்.
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது. இதில் கீர்த்தி சுரேஷ் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவியாக நடிக்கிறார். இதில் விஜய்யும் கல்லூரி மாணவராக வருகிறாராம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நண்பன் படத்தில்தான் முழுமையாக கல்லூரி மாணவராக நடித்திருந்தார். காவலன் படத்தில் சில காட்சிகள் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.