ரசிகர்களை இணையதளத்தில் திட்டிய சரண்யா மோகன்

frame ரசிகர்களை இணையதளத்தில் திட்டிய சரண்யா மோகன்

Sekar Tamil
'யாரடி நீ மோகினி', 'வெண்ணிலா கபடி குழு', 'வேலாயுதம்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த சரண்யா மோகன். கடந்த வருடம் அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை  திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அண்மையில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. 


இந்த செய்தியை அவர் தனது டிவிட்டர் வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்தார். இதற்கு ஏராளமானோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதே சமயத்தில் சிலர், அவர் அம்மா ஆனதை கொச்சைப்படுத்தி குறுந்தகவல் அனுப்பியிருந்தனர்.


இதை அறிந்த சரண்யா,அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். அவர்களை, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு பெண் தாய்மை அடைந்ததை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள முடியாத அரக்கர்கள்  என்று எல்லாம் நன்கு திட்டி, தனது ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.


Find Out More:

Related Articles:

Unable to Load More