எப்படி... எப்படி.... கூட்டணி மீண்டும் சேர்ந்தது எப்படி?

frame எப்படி... எப்படி.... கூட்டணி மீண்டும் சேர்ந்தது எப்படி?

Sekar Tamil
சென்னை:
எப்படி? எப்படி? இந்த கூட்டணி மீண்டும் ஜாயிண்ட் ஆனது எப்படி என்று புரியாமல் தலையை பிய்த்துக் கொள்கிறது கோலிவுட்... அந்த ரகசியம் உங்களுக்கா...


எந்த கூட்டணி என்று கேட்கிறீர்களா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அவரது மருமகன் தனுஷ் தயாரிக்கவுள்ளார் என்ற செய்திதான் கோலிவுட்டை ஆடாமல் அசையால் வாயை பிளக்க வைத்தது.


இந்த கூட்டணி எப்படி மீண்டும் சேர்ந்தது என்று பார்ப்போமா? ரஜினி அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் ரஞ்சித்தை பார்க்க வேண்டும் என்று சொல்ல... அவரும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்து பார்த்துள்ளார். அப்போது கபாலி படத்தின் வசூல் பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போதுதான் ரஜினி அந்த ஆனந்த அதிர்ச்சியை ரஞ்சித்திற்கு கொடுத்துள்ளார்.


ரஞ்சித் இன்னொரு கதை இருந்தால் கூறுங்கள் என்று. எப்படி இருந்து இருக்கும் அவருக்கு. பின்னர் அவர் கூறிய ஒன் லைன் மிகவும் ரஜினிக்கு பிடிக்க, உடனே தனுஷிற்கு போன் பறந்தது. நீங்களே இந்த படத்தை தயாரியுங்கள் என்று சொல்ல மறுப்பாரா தனுஷ். இப்படிதான் இவங்க கூட்டணி போட்டு இருக்காங்க...


ரஞ்சித் தற்போது இந்த படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கிட்டாராம்.


Find Out More:

Related Articles:

Unable to Load More