பப்ளிக்... பப்ளிக்... பளிச்சுன்னு முத்தம் கொடுத்த தமன்னா

Sekar Tamil
மும்பை:
பப்ளிக்... பப்ளிக்... இருந்தா என்ன? இருந்தா என்ன? வெட்டவெளியில் கிஸ் அடித்து பரபரப்பை கிளப்பி உள்ளார் தமன்னா.


என்ன விஷயம் என்றால்.... ‘ ரன்வீர் சிங் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடி நம்ம தமன்னா. சரி இதில் என்ன பிரச்னை என்கிறீர்களா? இருக்கே... இருக்கே... இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.


இதில் ரன்வீரும், தமன்னாவும் கலந்துக்கொண்டனர். அப்போது, ”தமன்னா, டான்ஸ் ஆடியபடி மேடைக்கு வந்தார். அவருக்கு அடுத்து வந்த ரன்வீரும் டான்ஸ் ஆடியபடி வந்தார். தமன்னா அருகில் வந்தவுடன் ரன்வீர் டான்ஸ் ஆடியபடி கீழே படுக்க, தமன்னா, அவருக்கு அருகில் சென்று கீழே குனிந்து முத்தம் கொடுத்தார். 


வெட்ட வெளியில் பலர் முன்னிலையில் தமன்னா கொடுத்த முத்தத்தை பார்த்து கேமிராமேன்கள் அதிர்ச்சியடைந்தாலும்... ப்ளாஷ் மின்னி தள்ளியது. வீடியோக்கள் ரெக்கார்ட் செய்ய... இப்போ தமன்னா மீது தீபிகா படுகோன் கோபமாக இருக்காராம். அவர் முத்தம் கொடுத்தால் இவர் ஏன் கோபப்பட வேண்டும் என்கிறீர்களா?


பின்னே நடிகை தீபிகா படுகோனேவும் நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்து வருவதாக சொல்றாங்களே... அப்போ... கோபம் வராமல் இருக்குமா? என்னம்மா... தமன்னா... இப்படி பண்ணீட்டீங்களேம்மா...



Find Out More:

Related Articles: