மனம் நொந்து ஆஸ்திரேலியாவுக்கு பறந்த சோனா

Sekar Tamil
கவர்ச்சி நடிகை சோனா தற்போது மனம் நொந்து போய் உள்ளாராம். விஷயம் என்னவென்றால்....


இவர் ஆண் நண்பர்கள் சிலரிடம், படம் தயாரிக்க பணம் கொடுத்து ஏமாந்தார் என்பதை நாம் அறிந்தோம். இதையடுத்து சிறு சிறு வேடங்களில், திரைப்படங்களில் நடித்தும், சொந்த தொழில்கள் செய்தும் பணம் சம்பாதித்து வந்தார். 


இந்நிலையில் அவர் செய்து வந்த தொழில்களில் ஏகப்பட்ட பணம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். அதை சரி செய்ய அவரால் முடியவில்லையாம். தற்போது படங்களில் நடிக்கும் வாய்ப்பும் குறைந்து போனதால், பணத்துக்கு என்ன செய்வதென்றே, அவருக்கு தெரியவில்லையாம். 


இதனால் அவர் மன ஆறுதலுக்காக, ஆஸ்திரேலியாவில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளாராம். 


எனவே இவர் இந்திய திரும்புவாரா இல்ல அங்கேயே செட்டில் ஆய்விடுவாரா.... என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Find Out More:

Related Articles: