மனைவியை விவகாரத்து செய்த அஜித்தின் தம்பி

Sekar Tamil
'வீரம்' திரைப்படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்த பாலா தற்போது தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். இதுபற்றி விரிவாக பார்க்கலாம். 


'அன்பு', 'காதல் கிசு கிசு', 'அப்பா அம்மா செல்லம்', 'கலிங்கா' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பாலா கடந்த 2005-ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த பாடகி அமிர்தாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.


இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். 


இந்நிலையில் இருவரும் விவாகரத்து கேட்டு, எர்ணாகுளம் குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இருவரும் கோர்ட்டில் ஆஜராகி, பிரிய முடிவு எடுத்துள்ளனர். 


Find Out More:

Related Articles: