ஜெயம் ரவியின் அடுத்த பட டைட்டில் இதோ....

Sekar Tamil
ஜெயம் ரவி தற்போது 'போகன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது பின்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. 


இந்நிலையில் அவர் அடுத்து 'மிருதன்' இயக்குனர் ஷக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் நடிக்கவுள்ள திரைப்படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளன.


இந்த படத்திற்கு 'டிக் டிக் டிக்' என்ற பெயரை தலைப்பாக வைத்துள்ளனர். இதே தலைப்பில் 1981-ம் ஆண்டு பாரதி ராஜா இயக்கத்தில் 'டிக் டிக் டிக்' திரைப்படம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   


சௌந்தர்ராஜன் இயக்கவுள்ள இந்த படத்தை ஹிதேஷ் ஐபாட் தயாரிக்கவுள்ளார். இசை பணிகளை டி.இமான் மேற்கொள்ள உள்ளார். 


இதன் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் சென்னையில் தொடங்க உள்ளது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகை தொழில்நுட்ப பணியாளர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: