தர்மதுரை செய்த நல்லது... குடும்பத்துடன் இணையும் சினேகா...

frame தர்மதுரை செய்த நல்லது... குடும்பத்துடன் இணையும் சினேகா...

Sekar Tamil
சென்னை:
நல்லதும் செய்யும்... கெட்டதும் செய்யும் என்று சினிமா படங்களை சொல்வார்கள். இந்த படம் நல்லது செய்துள்ளது. எந்த படம்? என்ன நல்லது செய்தது என்று பார்ப்போமா!


விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் தர்மதுரை. ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸ் பெற்ற இந்த படம் விமர்சகர்களாலும் தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டது. இந்த படம்தான் ஒருவருக்கு நல்லதை செய்துள்ளது.  


தர்மதுரையில் நடித்திருந்த திருநங்கை ஜீவா (எ) சினேகாவுக்கு இப்படம் மூலம் ஒரு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. சினேகா சிவகாசியை சேர்ந்தவர். திருநங்கையான இவர் 10 ஆண்டுகளுக்கு முன் வீட்டிலிருந்து வெளியேறி சென்னை வந்து சிறு சிறு வேலைகள் செய்து பிழைப்பு நடத்தி வந்தார். 


தொடர்ந்து சினிமா துறையில் நுழைந்து மேக்கப் கலைஞராக பணியாற்றினார். நடிகை அனுஷ்கா, ஸ்ரேயா என பலருக்கும் இவர் மேக்கப் கலைஞராக இருந்துள்ளார்.


தர்மதுரை படத்தில் நடிகை விஷாலினிக்கு மேக்கப் கலைஞராக பணியாற்றும் போதுதான் இயக்குனர் சீனு ராமசாமி அவரை ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.


இந்த படம் அவரை பிரபலமாக்க... இந்த படத்தை பார்த்த அவரது குடும்பத்தினர் தொலைபேசியில் இவரை தொடர்பு கொள்ள... அங்கு பாசம் பொழிந்துள்ளது. பிரிந்து போன தன் குடும்பத்தையும் விரைவில் சந்திக்க உள்ளாராம் சினேகா. நல்லது நடத்திய தர்மதுரையை அதாங்க விஜய்சேதுபதி, சீனுராமசாமியை தற்போது பேச்சுக்கு பேச்சு பாராட்டி தள்ளுகிறார்.



Find Out More:

Related Articles:

Unable to Load More