கமுக்கமான காதல் மன்னன்... பராகுவே பறந்தது தெரிந்தது...

frame கமுக்கமான காதல் மன்னன்... பராகுவே பறந்தது தெரிந்தது...

Sekar Tamil
பராகுவே:
தன் காதலியின் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே சென்றுவிட்டார் இந்த அதிரடி மன்னன். இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.


யார் அந்த அதிரடி மன்னன் தெரியுங்களா. விராட் கோலிதான். இவர் காதலி அனுஷ்கா சர்மா. இவரும், ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் படப்பிடிப்பு பராகுவே நாட்டில் நடந்து வருகிறது.


இதையடுத்து காதலியை பார்ப்பதற்காக வீராட்கோலி பராகுவே நாட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் இந்த செய்தி எந்த ஊடகத்திலும் வெளியாகாதது ஆச்சரியம்தான். ஆனால் இப்போ பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது. எப்படி தெரியுங்களா? அங்கு ஒரு ரசிகர் வீராட்கோலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் காட்டி கொடுத்து விட்டது. அந்த ரசிகர் அந்த படத்தை இணைய தளத்தில் பதிவேற்ற அப்புறம்தான் தெரிந்தது விராட்கோலி பராகுவேக்கு சென்று இருப்பது.


காதல் மன்னனின் ரகசிய குட்டு உடைஞ்சிடுச்சே... உடைஞ்சிடுச்சே...


Find Out More:

Related Articles:

Unable to Load More