தீபாவளி ரேசில் களம் காணும்... ஜி.வி.பிரகாஷ்... நானும் இருக்கேன்ல

frame தீபாவளி ரேசில் களம் காணும்... ஜி.வி.பிரகாஷ்... நானும் இருக்கேன்ல

Sekar Tamil
சென்னை:
தீபாவளி ரேசில் நானும் வர்றேன் என்று ஜி.வி.பிரகாசும் களத்தில் குதித்துள்ளார்.


இசைமைப்பாளராக தனது சினிமா பயணத்தை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் இப்போது முழு நேரமும் நடிகராக மாறிவிட்டார். 


இவர் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் கடவுள் இருக்கான் குமாரு படத்தில் நடித்து வருகிறார்.


புல் படமும் நகைச்சுவை படமாக இது உருவாகி உள்ளதாம். இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகிறது என்று சைலண்டாக இருந்தவர்கள் தற்போது அதிரடியாக தீபாவளிக்கு வருது... வருது... என்று அறிவித்துள்ளனர். 


ஏற்கனவே தீபாவளி ரேசில் காஷ்மோரா, கொடி, சிங்கம்3 படங்கள் இருக்க... இப்ப இவரும் அதில் ஜாயிண்ட் ஆகிட்டார். எப்படியோ... தீபவாளிக்கு ஒற்றை வெடி போல் இல்லாமல்... சரவெடி போல் அதிக படங்கள் வந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.


Find Out More:

Related Articles: