ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்த அறிமுக நடிகை

Sekar Tamil
'மதராசபட்டினம்', ' தெய்வ மகள்' உள்ளிட்ட திரைப்படங்கள் இயக்கிய இயக்குனர் விஜய் தற்போது பிரபு தேவா, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்த 'தேவி' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. 


இதையடுத்து விஜய், ஜெயம் ரவியை வைத்து ஒரு புது படம் இயக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தின், படப்பிடிப்பு பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. பெயரிடப்படாத இந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்க உள்ளார். 


ஹீரோயினாக சாய்ஷா சைகள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் தெலுங்குவில் நடிகர் அகில் உடன் இணைந்து 'அகில்' என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் கோலிவுட்டில், முதன்முறையாக ஜெயம் ரவி நடிக்கவுள்ள தமிழ் படத்தில் இவர் அறிமுகமாகிறார். இவர் ஹிந்தி நடிகர் திலீப் குமார் மற்றும் சாய்ரா பானுவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Find Out More:

Related Articles: