ஆர்யாவிற்கு ஜோடியாகும் பிச்சைக்காரன் நடிகை....

frame ஆர்யாவிற்கு ஜோடியாகும் பிச்சைக்காரன் நடிகை....

Sekar Tamil
அண்மையில் வெளிவந்த 'பிச்சைக்காரன்' திரைப்படத்தில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்த சாத்னா டைட்டஸ் தற்போது ஆர்யாவிற்கு ஜோடியாக போகிறார். இதுபற்றி விரிவாக பார்க்கலாம்..


ஆர்யா தற்போது 'மஞ்சப்பை' இயக்குனர் ராகவ் இயக்கும் 'கடம்பன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நிறைவடையும் தருணத்தில் உள்ளது. 


இந்நிலையில் ஆர்யா அடுத்து அமீர் இயக்கவுள்ள புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக சாத்னா டைட்டஸ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 


இதுகுறித்த பேச்சுவார்த்தைகளை தற்போது படக்குழுவினர் சாத்னா டைட்ஸிடம் நடத்தி வருகின்றனராம். எனவே இதுகுறித்த அதிகார பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles:

Unable to Load More