சென்னை:
தமிழ் சினிமாவிற்கு மாஸ் சினிமா பட டிரெண்ட் உருவாக காரண கர்த்தா ராகவா லாரன்ஸ்தான். இவருக்கு விருப்பமானவர் ரஜினிகாந்த். சரி இதெல்லாம் தெரிந்த விஷயம் என்கிறீர்களா? இருக்கே... விஷயம் இருக்கே...
காஞ்சனா 2 படத்தை தொடர்ந்து ராகவா ரொம்ப பிஸியாக இருக்கார். மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா என்று தொடர்ந்து பல படங்கள் கைவசம் உள்ளது. இதில் சிவலிங்கா ரஜினியை வைத்து வாசு எடுக்க விரும்பிய படம் (சந்திரமுகி-2) என்பதும் குறிப்பிடத்தக்கது.
தீவிர ரஜினி ரசிகரான இவர் சமீபத்தில் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அதோடு தான் நடிக்கும் படங்கள் பற்றியும், தன் அம்மாவுக்கு கட்டும் கோயில் பற்றியும் கூறியிருக்கிறார். இங்கு இன்னொரு விஷயமும் நடந்துள்ளது.
ரஜினிக்கு ஒரு கதையையும் சொல்லியிருக்காராம் ராகவா லாரன்ஸ், ஆனால் விஷயத்தை செம சீக்ரெட்டாக வைத்துள்ளனர். இப்போ... ரஜினி 2.0, அடுத்ததாக ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படம் என்று இருப்பதால் அதற்கு அடுத்தார் போல் ராகவா படமாக கூட இருக்கலாம் என்று கோலிவுட் உளவாளிகள் சொல்றாங்க.... சொல்றாங்க... ரஜினி ஓகே சொன்னா... இன்னொரு படையப்பா போல் மாஸ் அண்ட் கிளாஸ் படமாக அது இருக்கலாமாம்...
தான் ரஜினியை சந்தித்ததையும்... அப்போது எடுத்த ஒரு படத்தையும் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராகவா லாரன்ஸ்.