சென்னை:
புதுமுகங்களை வைத்து களத்தில் குதித்துள்ளார் பாலா... இது காதலின் மறுபக்கத்தை காட்டும் படமாக இருக்கலாம் என்று இப்பவே வதந்திகள் ராக்கெட்டில் பற்ற வைத்த நெருப்பாட்டம் உலா வருகிறது.
விஷயம் என்னன்னா? குற்றப்பரம்பரை சர்ச்சையால் அந்த படத்திற்கு சற்றே ஓய்வு கொடுத்துள்ளாராம் பாலா. இடைப்பட்ட காலத்தில் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இதில் பிரபல நடிகர், நடிகை நடிக்கலாம் என்று வந்த தகவல் இப்போது பொய்யாகி உள்ளது.
சாட்டைப் பட நாயகன் யுவன் ஹீரோவாக, சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி ஹீரோயினாக நடிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பற்றி இப்பவே பேச ஆரம்பித்து விட்டார்கள்.
விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம். புது முகங்கள் இருவருமே இளையவர்கள் என்பதால் பாலா இந்த படத்தை காதல் கொஞ்சும் படமாக எடுப்பார் என்கிறார்கள். ஆனால் பாலா படம் இப்படித்தான் இருக்கும் என்று யாராலும் வரையறுத்து கூற முடியாது என்பதுதான் உண்மை.