கெஸ்ட் ரோல்... நடிப்பாரா? இவர் நடிப்பாரா? எதிர்பார்ப்பு...!

Sekar Tamil
சென்னை:
சூப்பர் ஸ்டாரை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களுக்காக இவர் கண்டிப்பாக நடிப்பார் என்றும் தெரிகிறது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 2.0 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் தயாரிக்க உள்ளார் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் ரஜினியை ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறதாம். யார் நடிக்கும் படத்தில் தெரியுங்களா? 


பிரபுவின் மகன் விக்ரம் பிரபு தன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தில்  நடிக்கும் "நெருப்புடா" படத்தில்தான் ரஜினியை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடக்கிறதாம். பிரபுவின் இந்த வேண்டுகோளுக்கு கண்டிப்பாக தலையாட்டுவார் ரஜினிகாந்த் என்று கோலிவுட் வாசிகள் எதிர்பார்க்கின்றனர். 


Find Out More:

Related Articles: