பைரவா... பயங்காட்டுவார்... இனி கலங்க போகுது... இணையம்...

Sekar Tamil
சென்னை:
சாதாரணமாகவே விஜய் ரசிகர்கள் இணையத்தில் கலக்கி எடுப்பார்கள். இப்போது பைரவா படத்தின் தலைப்பில் உள்ள விஷயங்கள் தெரிந்தால்... எப்படி இருப்பார்கள்...


சரி தலைப்பில் என்ன விஷயம் இருக்கு என்று கேட்கிறீர்களா? இதோ சொல்லிடுவோம். பரதன் இயக்கத்தில்விஜய் நடித்து வந்த படத்திற்கு பைரவா என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கு இல்லீங்களா?


இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இதன் டைட்டில் லோகோவில் பல விஷயங்கள் அடங்கி இருக்கு. பைரவா என்றால் காக்கும் கடவுள் என்று அர்த்தமாம். சமஸ்கிருதத்தில் பைரவா' என்றால் 'பயம்கொள்ள வைப்பவர்’ என்ற அர்த்தம். அப்போ... விஜய்யை கண்டு பலருக்கு பயம் வரும் போலிருக்கிறது. அட இருங்க... இன்னும் விஷயம் இருக்கே...


இதில் பை என்ற எழுத்தை நன்றாக உற்றுப்பாருங்கள்... திரிசூலம் போன்று இருக்கும். அதுமட்டுமா! எழுத்துக்கள் அனைத்தும் கல்வெட்டில் இருக்கும் எழுத்துக்கள் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்போ.... இனிமே சமூக வலைத்தளத்தில் இந்த விஷயம்தான் இனி டாப் அடிக்கும் என்கின்றனர் கோலிவுட் வாசிகள்... நடத்துங்கப்பா... நடத்துங்க...



Find Out More:

Related Articles: