சூர்யாவுக்கும் ஜோடியான கீர்த்தி சுரேஷ்... கிராப் ஜிவ்...

Sekar Tamil
சென்னை:
விஜய்க்கு அடுத்து சூர்யாவுடனும் நடிக்க உள்ளார். இவரது மார்க்கெட் இப்போது கிடுகிடுவென்று உயருது என்கிறார் கோலிவுட் கோபாலு. இவர் என்ன சொல்றாருன்னா...


ரஜினிமுருகன் ஹிட் அடிக்க அதுக்கு பிறகு கீர்த்தி சுரேசுக்கு சுக்ர திசைதான் போங்க. அடுத்ததாக முன்னணி நடிகர்களுக்கே ஜோடியாகிறார். தனுசுடன் ஒரு படம்... விஜய்யுடன் ஒரு படம் என்று கிராப்பில் முன்னோக்கி போய்கிட்டே இருக்கும் இவருக்கு... அடுத்ததாக அடித்துள்ளது ஒரு லக்... என்ன தெரியுங்களா?


முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் இவருக்கு ஜோடியாவது கீர்த்தி சுரேஷ் என்பதுதான் லேட்டஸ் நியூஸ்.


 ‘கொம்பன்’ படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில்  சூர்யாவுடன் நடிக்க கீர்த்தி சுரேசுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்காம். ‘எஸ்-3’ படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்து விக்னேஷ் சிவன் படத்திலும், தொடர்ந்து அருண்குமார் இயக்கும் படத்திலும் நடிக்கிறார்.


இந்த படங்களுக்கு பிறகு முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. இந்த படத்தில்தான் கீர்த்திசுரேஷ் ஜோடியாகி இருக்காராம். இப்ப இந்த பொண்ணு தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருதுங்கோ...



Find Out More:

Related Articles: