முதன்முறையாக யுவன்ஷங்கர் ராஜா உடன் இணைந்த அருண் ராஜா

Sekar Tamil
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கபாலி' திரைப்படத்தில் இடம்பெற்ற  'நெருப்பு டா' ஹிட் பாடலை பாடிய அருண்ராஜா காமராஜ் தற்போது முதன்முறையாக யுவன்ஷங்கர் ராஜா உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். 


அறிமுக இயக்குனர் சீனிஷ் இயக்கும், 'பலூன்' திரைப்படத்தில் ஜெய் மற்றும் அஞ்சலி இருவரும் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு யுவன்ஷ்ங்கர் ராஜா இசையமைக்கிறார். 


இந்த படத்தில் மொத்தம் 4 பாடல்கள் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் இதில் இடம்பெற உள்ள முக்கியமான ஒரு ரொமான்டிக் பாடலை, அருண்ராஜா பாட ஒப்பந்தமாகியுள்ளார். இந்த வாய்ப்பை இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, அவருக்கு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


கபாலியில் இடம்பெற்ற 'நெருப்பு டா' பாடல், ரசிகர்களை எப்படி கவர்ந்துதோ, அதே போல் இந்த பாடலும் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find Out More:

Related Articles: