சரத்குமார், ராதாரவி தற்காலிக நீக்கம்... நடிகர் சங்கம் அதிரடி முடிவு

frame சரத்குமார், ராதாரவி தற்காலிக நீக்கம்... நடிகர் சங்கம் அதிரடி முடிவு

Sekar Tamil
சென்னை:
நீக்குறது... நீக்குறதுதான்... என்று 3 நடிகர்களை சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்க முடிவு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. இதில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை அதிரடியாக நீக்கி தீர்மானம் போடப்பட்டுள்ளது. இந்த 3 பேரும் நடிகர் சங்கத்தில் ஊழலில் ஈடுப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நடிகர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. 


 மேலும் காவிரி பிரச்னையில் முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஆதரவு அளிப்பது, கன்னட நடிகர்களின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பது என்பன போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.


பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சரத்குமார் உட்பட 3 பேர் நீக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. 



Find Out More:

Related Articles:

Unable to Load More