ஹாலிவுட் தயாரிப்பாளர் படத்தில் த்ரிஷா

Sekar Tamil
'நாயகி' திகில் திரைப்படத்தை அடுத்து த்ரிஷா தற்போது இயக்குனர் மாதேஷின் 'மோகினி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் லண்டனில் தொடங்கியது. 


இதையடுத்து இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, தற்போது சென்னையில் நடைபெறுகிறது. பேய் கதையை கொண்டு உருவாகும் இந்த படத்தில் த்ரிஷா சமையல் செப்பாக நடிக்கிறார். அவருடன் ஜாங்கிரி மதுமிதா, கணேஷ் வெங்கடராமன் உள்பட பலர் நடிக்கின்றனர். 


இதனையடுத்து த்ரிஷா ஒரு புது திகில் திரைப்படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார். அந்த படம் ஹாலிவுட்டில் வெளியான ஒரு திகில் படத்தின் சாயலில் உருவாகவுள்ளதாம். மேலும் அந்த படத்தை ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்க போகிறாராம்.


 அதனால், இதில் த்ரிஷா நடிப்பாரா, இல்லையா என்பது இந்த படத்தின் பரிசீலினை முடிந்த பின்பு தான் தெரியவரும். எனவே அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்.



Find Out More:

Related Articles: