உணவகம்... திரும்பும் இடமெல்லாம் தல...தல...தலதான்...

frame உணவகம்... திரும்பும் இடமெல்லாம் தல...தல...தலதான்...

Sekar Tamil
சென்னை:
திரும்பும் இடத்தில் எல்லாம் தல... தல... தலதான்... அப்படி இருக்கிறது இந்த ஓட்டல்.


மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்திற்கு சொந்தக்காரர் நடிகர் அஜித். ரசிகர்களால் செல்லமாக தல என்று அழைக்கப்படுகிறார். அஜித் தன் ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டது அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும் இன்று வரை அவரது ரசிகர்கள் கட்டுக்கோப்பாக இருந்து வருகின்றனர்.


கோயம்புத்தூர் மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தில் "கோலிவுட் ரெஸ்டாரன்ட்" என்னும் பெயரில் ஒரு உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. தீவிர அஜித் ரசிகரால் நடத்தப்படும் இந்த உணவகத்தில் வாசலில் ஆரம்பித்து உணவகம் முழுவதும் அஜித் படம்... ஸ்டிக்கர்தான். 


மெனு கார்டில் கூட அஜித் புகைப்படங்களே ஜொலிக்கின்றன. 'நம்ம கூட இருக்குறவங்கள நாம பாத்துகிட்டா மேல இருக்குறவன் நம்மல பாத்துப்பான்' போன்ற டயலாக்குகளும் அதில் இடம் பெற்றுள்ளன. இது எப்படி இருக்கு!



Find Out More:

Related Articles:

Unable to Load More