நானா... நீயா... ரஜினி படத்திற்காக நயன்-த்ரிஷா போட்டா போட்டி

Sekar Tamil
சென்னை:
அந்த படத்தில் நானா... நீயா... என்று செம போட்டி நடக்கிறதாம் த்ரிஷா, நயன்தாரா ஆகியோருக்கு இடையில் என்று வதந்தி வசந்தா போகிற போக்கில் தகவல் சொல்றாங்க. 


விஷயம் என்னன்னா? முன்னணி நடிகர்களுடன் மட்டுமின்றி கதாநாயகிக்கு ஹோப் உள்ள கேரக்டரிகளிலும் நயன்தாரா வெளுத்து வாங்கி வருகிறார். மறுபக்கம் த்ரிஷாவுக்கு கொஞ்சம் மார்க்கெட் டல்தான் இருந்தாலும் இவரும் மார்க்கெட்டில் முன்னணியில்தான் இருக்கிறார். 


இப்போது இவர்கள் 2 பேருக்கு ஒரு படத்தில் நடிக்க செம போட்டி போடுகின்றனர். எந்த படம் தெரியுங்களா? தனுஷ் தயாரிக்க, பா.ரஞ்சித் இயக்க ரஜினி நடிக்க உள்ள படம்தான் அது. 


த்ரிஷா தனக்கு வாய்ப்பு கொடுக தனுஷிடம் ஏற்கனவே பேசி உள்ளாராம். ஆனால் நயன்தாராவோ... நேரடியாக சூப்பர் ஸ்டாரிடமே பேசி இருக்கிறார். அப்போ.. யாருக்கு வாய்ப்பு என்பதுதான் இப்போது கோலிவுட் எதிர்பார்ப்பாக உள்ளது. 



Find Out More:

Related Articles: