சென்னை:
காத்திருந்து... காத்திருந்து... கானல் நீராகி விடக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறாராம் சிவகார்த்திகேயன் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
என்ன விஷயம் தெரியுங்களா? சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் விரைவில் இவரது ரெமோ படம் திரைக்கு வர உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் அதிக விலைக்கும் விற்பனையாகி வருகிறது.
இந்த படம் இன்னும் சில நாட்களில் சென்சாருக்கு போக உள்ளது. படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்க வேண்டும் என்றுதான் சிவகார்த்திகேயன் வேண்டிக் கொள்கிறாராம். தாய்க்குதானே தெரியும் பிரசவத்தின் வேதனை என்பது போல் தன் படம் அனைத்து தரப்பினரும் பார்ப்பதால் யு சான்றிதழ் கிடைக்க வேண்டும் என்றுதான் வேண்டிக் கொள்கிறாராம்.
எப்படியும் யு சான்றிதழ் வாங்கி வரிவிலக்கு பெற வேண்டும் என்பதே படக்குழுவினர்களின் ஆவல். என்ன நடக்கும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.