இருமுகன் வசூல்... சீயான் விக்ரம் மார்க்கெட் டாப்போ... டாப்...

frame இருமுகன் வசூல்... சீயான் விக்ரம் மார்க்கெட் டாப்போ... டாப்...

Sekar Tamil
சென்னை:
ஒரு ஹிட்... ஒரே ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்த விக்ரமை உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்துள்ளது இருமுகன்.


ஆமாங்க... உண்மைதான். விக்ரம் நடித்த இருமுகன் நாளுக்கு நாள் வசூலில் செமத்தியா கல்லா கட்டி சாதனை செய்து வருகிறது. 


ஆரம்பத்தில் இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும்... நான் யாருக்கும் அடங்காத அரேபியன் குதிரை என்பது போல விமர்சனங்களை சுக்குநூறாக்கி விக்ரம் என்ற தனி நபரால் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.


இந்த படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ.26 கோடியை அள்ளியுள்ளது. உலகம் முழுவதும் ரூ.65 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம். எப்படியும் இந்த வார இறுதிக்குள் இருமுகன் ரூ.100 கோடி கிளப்பில் சேர்ந்து விடும் என்கின்றனர். இந்த படத்தால் விக்ரமின் மார்க்கெட் தற்போது உச்சாணிக் கொம்பிற்கு சென்றுவிட்டது.


Find Out More:

Related Articles:

Unable to Load More