விஜய்க்கு உதவிய மிஷ்கின்... ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...

Sekar Tamil
சென்னை:
விஜய்க்கு மாஸ் ஹிட் பாடலான ஆல்தோட்ட பூபதியை அந்த படத்தில் இடம் பெற செய்தவர் யார் தெரியுங்களா?


வேறு யாருமில்லங்க... மிஷ்கின்தான் அவர். விஜய்க்கு முதன் முதலாக ஒரு மாஸ் குத்து பாட்டு ஹிட் என்றால் அது யூத் படத்தில் இடம்பெற்ற ‘ஆல்தோட்டபூபதி’ பாடல் தான் என்பதை யாரும் மறுக்க மாட்டமார்கள்.


வின்செண்ட் செல்வா இயக்கிய இந்த படத்தில் இந்த பாட்டு இடம் பெற அப்போது இந்த படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்த தான் மிஷ்கின்தான் காரணமாம். இந்த பாடல் முதலில் படத்தில் இல்லையாம். வாலி எழுதிய ஒரு பாடல் தான் இருந்துள்ளது. கடைசிநேரத்தில் அந்த பாடலை மறைத்து கபிலன் எழுதிய இந்த பாடலை கொடுத்தது மிஷ்கின்தானாம். 


தயாரிப்பாளர் முதல் அனைவரும் மிஷ்கினை திட்ட வின்செண்ட் செல்வா மட்டும், சூப்பர்டா... கலக்கிட்டடா, இதுதான் நல்லா இருக்கு என்று பாராட்டு இருக்கிறார். அவர் கூறியதுபடி பாட்டும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிடுச்சு.


Find Out More:

Related Articles: