கோர்த்து விட்ட பாலாஜி... ஜி.வி.யை வெளுத்தெடுத்த பிரகாஷ்ராஜ்

Sekar Tamil
சென்னை:
பிரகாஷ்ராஜ் கையால் ஜி.வி.பிரகாஷை பாலாஜி அடிவாங்க வைத்த செம கலாட்டா சம்பவம் நடந்துள்ளது. 


விஷயம் என்ன தெரியுங்களா? ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’.


இதில் பிரகாஷ்ராஜ், ஆர்.ஜே.பாலாஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் 25-வது படமாக இது உருவாகி உள்ளது. 


இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய ஜி.வி.பிரகாஷ்குமார், இந்த படத்தில் பாலாஜிக்கு வேற லெவல் கிடைக்கும். பிரகாஷ் ராஜ் சாருடன் நடிப்பது இதுதான் முதல் முறை. 


அவரை திட்டி இதில் ஏகப்பட்ட வசனம் இருக்கு. அதுக்கு முன்னாடி, அவரை ஏதாவது கேட்டு சொல்லி பாலாஜி வெறுப்பேற்ற இதனால் கடுப்பான பிரகாஷ்ராஜ் நாங்கள் அடிவாங்கிற காட்சிகளிலெல்லாம் உண்மையிலேயே எங்களை புரட்டி எடுத்து விட்டார்.


பாலாஜியால் நான் அவரிடம் நிறைய அடி வாங்கியிருக்கிறேன் என்று செம காமெடியாக பேச... அரங்கில் இருந்தவர்கள் கைதட்டல் விண்ணை முட்டியது.


Find Out More:

Related Articles: