முதன்முறையாக பாரதிராஜா உடன் கூட்டணி சேர்ந்த மம்மூட்டி

frame முதன்முறையாக பாரதிராஜா உடன் கூட்டணி சேர்ந்த மம்மூட்டி

Sekar Tamil
இயக்குனர் சிகரம் பாரதிராஜா தற்போது 'குரங்கு பொம்மை' என்ற திரைப்படத்தில், குணச்சித்திர ரோலில் நடித்துள்ளார். இதில் ஹீரோவாக வித்தார்த் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் நித்திலன் இயக்கிய இந்த படத்தை ஸ்ரேயா ஸ்ரீ மூவீஸ் தயாரித்துள்ளது.


வித்தியாசமான தலைப்பை கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு, மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி தனது சமூக வலைதள பக்கத்தில், இந்த படத்தின் முதல் லுக் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளார். 


மேலும்,முதன்முறையாக, பாரதிராஜா நடித்த 'குரங்கு பொம்மை' திரைப்படத்தின் முதல் லுக் போஸ்ட்டரை, மம்மூட்டி வெளியிட்டு, அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Find Out More:

Related Articles:

Unable to Load More