சென்னை:
வைச்சா வச்சதுதான்... மாற்றம் என்பது அகராதியில் கூட கிடையாது என்று பிடித்த பிடியில் உடும்பாட்டாம் இருக்காராம் இந்த இயக்குனர். யார் என்று தெரியுங்களா?
வேறு யாரு கஜினி கொடுத்த இயக்குனர் முருகதாஸ்தான். இந்திய சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்து தொடர்ந்து ஹிட் படங்களாகவே கொடுத்துவருபவர். இப்போது இவர் மகேஷ்பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் ஒரு படத்தை பரபரவென்று இயக்கி வருகிறார்.
இப்படத்திற்கு 'எனிமி' என்று தலைப்பு வைக்க முடிவு செய்திருக்கிறாராம். தெலுங்கில் பிரச்னை இல்லை. எந்த தலைப்பாக இருந்தாலும்... ஆனால் தமிழில் அப்படி இல்லையே... தமிழில்தானே தலைப்பு வைக்க வேண்டும். ஆனாலும் தான் பிடித்த பிடியை விடாமல் இந்த தலைப்புதான் சரி என்று சொல்லிவிட்டாராம் முருகதாஸ். படத்தின் கதைக்கு தான் தலைப்பு என்பதில் செம்ம்ம்மமமம உறுதியாக இருக்காராம்..