முழு சம்மதத்துடன்தான் திருமணம்... கார்த்தி "ஓப்பன் டாக்"

Sekar Tamil
சென்னை:
முழு சம்மதத்துடன்தான் திருமணம் செய்துள்ளேன் என்று நடிகையின் தாயார் தன்மீது கூறிய குற்றச்சாட்டை மறுத்துள்ளார் தயாரிப்பாளர் கார்த்தி.


விஷயம் என்னன்னா? பிச்சைக்காரன் படத்தின் நாயகி சாட்னா யாருக்கும் தெரியாமல் விநியோகஸ்தர் கார்த்தியை திருமணம் செய்து கொண்டது கோலிவுட்டை கடந்த சில நாட்களாக பரபரப்புக்கு உள்ளாகி உள்ளது. இவர் பிச்சைக்காரன் படத்தை தமிழகத்தில் வெளியிட்ட விநியோகஸ்தர்.


இதற்கிடையில் சாட்னாவின் தாயார் என் மகளை ஏமாற்றி கார்த்தி திருமணம் செய்துவிட்டார் என்று எழுப்பிய குற்றச்சாட்டால் மேலும் பரபரப்பு உருவானது. இந்நிலையில் இதுவரை அமைதிகாத்து வந்த கார்த்தி முதல்முறையாக இந்த விஷயத்தில் ஓப்பன் டாக் கொடுத்துள்ளார். 


அவர் என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா? எங்கள் திருமணத்திற்கும் இருவீட்டார் சம்மதமும் இல்லை தான். ஆனாலும் அவர்கள் சம்மதிப்பார்கள் என்று காத்திருக்கிறோம், சாட்னாவை கட்டாயப்படுத்தி நான் திருமணம் செய்யவில்லை. அவரது முழு சம்மதத்துடன்தான் திருமணம் நடந்துள்ளது என்று சொல்லியிருக்காருங்க... சொல்லியிருக்காருங்க...


Find Out More:

Related Articles: