ரஜினிக்கு உப்பு பார்சல்... ரசிகர்கள் கொதிப்போ... கொதிப்பு...

frame ரஜினிக்கு உப்பு பார்சல்... ரசிகர்கள் கொதிப்போ... கொதிப்பு...

Sekar Tamil
சென்னை:
எங்கள் தலைவருக்கு "உப்பு பார்சலா" என்று ரசிகர்கள் கொதித்து போய் உள்ளனர். யாரோட ரசிகர்கள் தெரியுங்களா?


காவிரியில் தண்ணீர் திறந்துவிடாமல் பிரச்னை உருவாகும் போதெல்லாம் அதில் சிக்கி தவிப்பது சூப்பர் ஸ்டார் ரஜினியாகத்தான் இருக்கும். அரசியல்வாதிகள் பகடைக்காய் போல் இவரை உருட்டி விடுகின்றனர். பிறப்பால் கன்னடராக இருந்தாலும், தமிழோடும், தமிழர்களோடும்தான் இருக்கிறார் ரஜினி.


இந்நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடகாவில் வன்முறை தலைவிரித்தாடியது. தமிழர்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு இதுவரை கருத்து தெரிவிக்காமல் மௌனமாய் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியை வம்புக்கு இழுத்துள்ளது இந்து மக்கள் கட்சி.


எப்படி தெரியுங்களா? இந்து மக்கள் கட்சி ரஜினிக்கு உப்பு பார்சல்களை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாக... அவரது ரசிகர்கள் கொதித்து போய் உள்ளனர். 



Find Out More:

Related Articles:

Unable to Load More